உள்நாடு

பணிப்புறக்கணிப்பை கைவிட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவிப்பு

நாடு தழுவிய ரீதியில் இன்று (25) முன்னெடுக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்பை கைவிட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

சுகாதார அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் வழங்கப்பட்ட எழுத்து மூல உறுதியை அடுத்து இந்த தொழிற்சங்க போராட்டத்தை கைவிடுவதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

வைத்தியர்கள் இடமாற்றம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று காலை 8.00 மணி முதல் நாடு தழுவிய ரீதியில் பணிப்பறக்கணிப்பில் ஈடுபட முன்னதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் திட்டமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிக்ககூடும்

பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்யத் தவறியதற்காக ஹர்ஷான் டி சில்வாவுக்கு விளக்கமறியல்

editor

கடந்த 24 மணித்தியாலத்தில் 541 பேர் கைது