வகைப்படுத்தப்படாத

பணிநிறுத்த போராட்டத்தை கைவிடுமாறு கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை

(UDHAYAM, COLOMBO) – நாடளாவிய ரீதியாக நாளைய தினம் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள பணிநிறுத்த போராட்டத்தை கைவிடுமாறு கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திடம் அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

கர்த்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையால் கொழும்பில் இன்று நடத்தப்பட்ட ஊடக சந்திப்பில் வைத்து இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது.

மக்களின் நிலைக்குறித்து சிந்தித்து தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

මීගමුව මහ නගර සභාවේ විපක්ෂ නායක සැකපිට අත්අඩංගුවට

Sri Lanka, West Indies fined for slow over rate

ஜிம்பாப்வேயில் தொடரும் அரசியல் குழப்பம்