உள்நாடுசூடான செய்திகள் 1

“பணம் பெற்று கனடாவிற்கு ஆட்களை அனுப்பும் சாணக்கியன்”

(UTV | கொழும்பு) –  நாடா ளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பணம் பெற்றுக் கொண்டு கனடாவிற்கு ஆட்களை அனுப்புவதாக நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

பிள்ளையான் என அழைக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (21.11.2022) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மூன்று கோடியினை பெற்றுக் கொண்டு கனடாவிற்கு ஆட்களை அனுப்புகின்றார்.

எங்களுக்கு ஒழுக்கத்தினை கற்பிப்பதற்கு முன்னர், கூட்டமைப்பிலுள்ள சாணக்கியனுக்கு ஒழுக்கத்தினை கற்பிக்க வேண்டும் எனவும் பிள்ளையான், எம்.ஏ.சுமந்திரனை நோக்கி தெரிவித்துள்ளார்.

முழு வீடியோ

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அஸ்வெசும தொடர்பில் புதிய அறிவிப்பு!

பிரபாகரனை பின்பற்றும் சஜித் – பிரசன்ன ரணதுங்க

சதொச விற்பனை நிலையத்தில் தீ விபத்து

editor