உள்நாடுபிராந்தியம்

பட்டாசு வெடித்ததில் ஒருவர் பலி

திருகோணமலை தம்பலகாமம் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் நேற்று (06) இரவு நடைபெற்ற வருடாந்திர திருவிழாவின் போது பட்டாசு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

தேர் பவனியின் போது பட்டாசு வானவேடிக்கை நிகழ்வு நடைபெற்ற போது, அதில் ஒரு வானவேடிக்கை பட்டாசு வெடிக்கவில்லை.

இதனால், அருகில் இருந்த ஒருவர் அந்த பட்டாசை காலால் உதைத்துள்ளார்.

அது மற்றொருவர் மீது மோதி வெடித்துள்ளது.

இதனால் காயமடைந்த அவர், தம்பலகாமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இறந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 45 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது.

இறந்தவரின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை கந்தளாய் சட்டவைத்திய அதிகாரியால் நடத்தப்பட்டது.

சம்பவம் குறித்து தம்பலகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

Related posts

விசேட உரையொன்றை நிகழ்த்த தயாராகும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

editor

ஜனாதிபதியை அவசரமாக சந்தித்த ஹரீஸ் – நடந்தது என்ன ?

பேஸ்புக் விருந்து- 2 பெண்கள் உட்பட 28 பேர் கைது