உள்நாடுபிராந்தியம்

பட்டம் விட்டு விளையாடிய 7 வயது சிறுவன் திடீர் மரணம்

யாழ்ப்பாணம், சுன்னாகம் தெற்கு பகுதியைச் சேர்ந்த கேதீஸ்குமார் கார்த்திகேயன் (வயது 07) என்ற சிறுவன், பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளான்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

கடந்த 31ஆம் திகதி பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்தபோது சிறுவனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

அவரை உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது, அங்கு அவர் மயக்கமடைந்தார்.

ஆனால், சிகிச்சை பலனளிக்காத நிலையில், நேற்று (03) மாலை அவர் உயிரிழந்தார்.

சிறுவனின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூறு பரிசோதனையில், மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவு காரணமாக மரணம் நிகழ்ந்ததாக தெரியவந்துள்ளது.

-கஜிந்தன்

Related posts

இருபது – இதுவரை 39 மனுக்கள் தாக்கல் [UPDATE]

ஆட்கடத்தல் விசாரணைக்காக ஓமானுக்கு சென்ற இலங்கை அதிகாரிகள்

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 11 வருடங்கள் பூர்த்தி