அரசியல்உள்நாடு

பட்டதாரிகளுக்கான ஆசிரியர் போட்டிப் பரீட்சை விரைவில் – பிரதமர் ஹரிணி

வேலையற்ற பட்டதாரிகளை ஆசிரியர்களாக ஆட்சேர்ப்பு செய்வதில் தாமதம் ஏற்படுவதற்குக் காரணமான உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நான்கு வழக்குகளின் நீதித்துறை நடவடிக்கைகள் தற்போது இறுதிக் கட்டத்தில் இருப்பதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

எனவே, நீதித்துறை நடவடிக்கைகள் முடிந்தவுடன் உடனடியாக வர்த்தமானி வெளியிடப்படும் என்றும், பட்டதாரிகள், ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கப்படும் என்றும் பிரதமர் கூறினார்.

வேலையற்ற பட்டதாரிகள் கூட்டு சங்கத்தின் பிரதிநிதிகளிடையே கல்வி அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது பிரதமர் இவ்வாறு கூறினார்.

ஏற்கனவே அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளபடி, தேவைக்கேற்ப ஏனைய பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அத்துடன் ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பை திருத்துவதற்கும், வயது வரம்பை நீட்டிப்பதற்கும், தற்போதுள்ள அனைத்து ஆசிரியர் வெற்றிடங்களுக்கு உடனடியாக ஆட்சேர்ப்பு செய்வதற்கும் இதன்போது இணக்கம் ஏற்பட்டுள்ளது.

Related posts

திட்டமிட்டவாறு உயர்தரப் பரீட்சை இடம்பெறும்

முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்னவுக்கு விளக்கமறியல் நீட்டிப்பு

editor

கட்டாயப் பிரேத பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தம் – நீதி அமைச்சு

editor