சூடான செய்திகள் 1

படையினரை ஏற்றிச் சென்ற ஜீப் விபத்து – ஒருவர் பலி 8 பேர் காயம்

(UTVNEWS | COLOMBO) – முல்லைத்தீவு கோப்பாபுலவு பகுதியில் நிலைகொண்டுள்ள 59 ஆவது படைத்தலைமையகத்திற்கு முன்னால் படையினரை ஏற்றிச் சென்ற ஜீப் ஒன்று இன்று(14) அதிகாலை 5.40 மணியளவில் வேக கட்டுப்பாட்டினை இழந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

இதில் ஒரு படையினன் உயிரிழந்துள்ளதுடன் 8 படையினர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

விபத்து குறித்து முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் படைப் பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Related posts

ரத்கம வர்த்தகர்கள் கொலை- கைதானவர்கள் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

சட்டமா அதிபர் உயர் நீதிமன்றுக்கு விசேட அறிவிப்பு

உச்சத்தை தொட்ட பச்சை மிளகாயின் விலை

editor