விளையாட்டு

பஞ்சாப் வீழ, மும்பைக்கு வெற்றி

(UTV | துபாய்) – பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது.

14 வது ஐபிஎல் சீசனின் நேற்றைய இரண்டாவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன. நாணய சுழற்சியை வென்ற மும்பை தலைவர் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

அந்த அணியில் இஷான் கிஷனுக்குப் பதில் சௌரப் திவாரி, ஆடம் மில்னுக்குப் பதில் நாதன் கூல்டர் நைல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். பஞ்சாப் அணியில் மயங்க் அகர்வாலுக்குப் பதில் மந்தீப் சிங் களமிறங்குகிறார்.

இதை அடுத்து துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 135 ஓட்டங்கள் எடுத்தது.

அதிகபட்சமாக மார்க்ரம் 42, ஹூடா 28, ராகுல் 21 ஓட்டங்கள் சேர்த்தனர். பின்னர் 136 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 19 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 137 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் அதிரடியாக விளையாடிய ஹார்திக் பாண்டியா 30 பந்துகளில் 40 ஓட்டங்கள் எடுத்து மும்பை அணியின் வெற்றிக்கு உதவினார்.

    

Related posts

இங்கிலாந்திடம் ஆஸி வீழ்ந்தது

ICC உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை – முதலிடம் பிடித்த இந்தியா

2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தாமதம்