சூடான செய்திகள் 1

பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு…

(UTV|COLOMBO) முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோருக்கு எதிரான வழக்கை ஆகஸ்ட் மாதம் 07ம் திகதி மீண்டும் விசாரிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் இன்று (28) விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் திவிநெகும திணைக்கள நிதியை மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை

திட்டமிட்டபடி புகையிரத தொழிற்சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தில்

மக்களை ஏமாற்ற வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது-கல்வி அமைச்சர்