உள்நாடு

பசில்- ரணில் மீண்டும் சந்திப்பு: மாலை முக்கிய பேச்சு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவிற்கும் இடையில் இன்றைய தினமும் விசேட பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளது.

ஜனாதிபதியின் அதிகாரபூர்வ இல்லத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.

அண்மையில் நடைபெற்ற மே தின நிகழ்வுகள் மற்றும் தற்போதைய அரசியல் கள நிலவரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

அதிகாரப் பகிர்வு மற்றும் தனியார்மயப்படுத்தல் தொடர்பில் அரசாங்கத்தினதும் மொட்டு கட்சியினதும் கொள்கைகள் மாறுபட்டவை என பசில் ராஜபக்ச கடந்த சந்திப்புக்களின் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

பௌத்த மகாநாயக்க தேரர் மற்றும் தேசிய அமைப்புக்களுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டியது அவசியமானது என அவர் மேலும் வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

வலுக்கும் கொரோனா

இந்தியா கொடுத்த கடனை அரசு ஏமாற்றி வருகிறது

மைத்திரிக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு!