உள்நாடு

பசறை விபத்து : பேரூந்து – லொறியின் சாரதிகள் விளக்கமறியலில்

(UTV | கொழும்பு) –  லுணுகலை – பசறை வீதியின் 13 ஆம் கட்டை பகுதியில் நேற்று இடம்பெற்ற பேரூந்து விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த பேரூந்தின் சாரதியும், லொறியின் சாரதியும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை இன்றைய தினம் பதுளை பதில் நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவர்களை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

வழமையாக பேரூந்தை செலுத்தும் சாரதி நேற்றைய தினம் பேரூந்தை செலுத்தியிருக்கவில்லை எனவும் அவருக்கு பதிலாக மற்றுமொருவரே பேரூந்தை செலுத்தியதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்.போல்

Related posts

உலக பாரம்பரிய நக்கிள்ஸ் விளிம்பில் ஒரு ஹோட்டல் வளாகம்

பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிப்பதற்கு, மற்றுமொரு சந்தர்ப்பம்

நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு