சூடான செய்திகள் 1

பசறையில் இன்று அதிகாலை நடந்த கொடூரம்

(UTV|COLOMBO)-பதுளை, பசறை பகுதியில் உள்ள வியாபார நிலையம் ஒன்றில் இன்று (14) அதிகாலை 1.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

தீ ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த பெண்கள் மூவரும் வியாபார நிலையத்தின் பின் பகுதியில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் 62 வயது நிரம்பிய மல்லிகா, 61 வயது நிரம்பிய சித்ரா, 23 வயது நிரம்பிய கல்பனா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பசறை மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பெரும் போராட்டத்தின் பின்னர் தீ ஏனைய கட்டடங்களுக்கு பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இந்த தீ விபத்தினால் ஏற்பட்ட சேத விபரம் இதுவரை கண்டறியப்படவில்லை.

பசறை பொலிஸார் தீ விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

சபாநாயகர் சர்வதிகார போக்கு? நடவடிக்கைக்கு தயாராகும் எதிர்க்கட்சி!!

தலவாக்கலை – லிந்துலை நகரசபையின் உபத்தலைவர் கைது

அரச வேலை வாய்ப்பு – தெரிவு செய்யப்படாத பட்டதாரிகளுக்கு அறிவித்தல்