விளையாட்டு

பங்களாதேஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து பிரபல வீரர் விலகல்

(UDHAYAM, COLOMBO) – சுற்றுலா பங்களாதேஸ் அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான ஒரு நாள் கிரிக்கட் தொடரில் இருந்து சிறந்த துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா விலகியுள்ளார்.

நேற்று இடம்பெற்ற பயிற்சி போட்டியின் போது அவருக்கு ஏற்பட்ட உபாதை காரணமாக இந்த தொடரியில் இருந்து விலகியுள்ளார்.

எனினும் குசல் ஜனித்பெரேராவுக்கு பதிலாக சகலதுறை வீரர், மிலிந்த சிறிவர்தன இலங்கை அணிக்கு அழைக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் சனிக்கிழமை தம்புள்ளை மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

Related posts

2020 ஒலிம்பிக் தகுதி பெற்றவர்கள் நேரடியாக பங்கேற்கலாம்

நாணயற் சுழற்சியில் இலங்கை அணிக்கு வெற்றி

மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் கிரன் பொலார்டுக்கு விதிக்கபட்ட அபராதம்…