உள்நாடு

பங்களாதேஷ் கடற்படை போர் கப்பல் கொழும்பு துறைமுகத்தில்!

பங்களாதேஷ் கடற்படையின் பி.என்.எஸ். சொமுத்ரா ரோய் போர் கப்பல் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று வெள்ளிக்கிழமை (31) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

நாட்டை வந்தடைந்த இக்கப்பலை இலங்கை கடற்படையினர் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றனர்.

இவ்வாறு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்த போர்க்கப்பல் 115.2 மீற்றர் நீளமுடையதாகும். 274 பணியாட்களைக் கொண்ட இக்கப்பலின் கப்டனாக சஹ்ரியார் அலாம் செயற்படுகின்றார்.

இக்கப்பல் கொழும்பு துறைமுகத்தில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையிலான நட்பை மேம்படுத்துவதற்காக இலங்கை கடற்படை ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளில் அதன் குழுவினர் பங்கேற்க உள்ளனர்.

அத்துடன் தீவின் பல பகுதிகளுக்குச் சென்று முக்கியமான இடங்களைப் பார்வையிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. இக்கப்பலின் செயல்பாட்டுத் திறன்கள் குறித்து இலங்கை கடற்படை வீரர்களுக்குக் கற்பிக்கும் ஒரு நிகழ்ச்சியும் கப்பலில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சி நிரல்களை நிறைவு செய்து கொண்டு ஞாயிற்றுக்கிழமை இப்போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்திலிருந்து புறப்படவுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

13ஐ நடைமுறைப்படுத்துவதே இலங்கையின் அரசியல் நலனுக்கு நன்மை தரும் – டக்ளஸ்

editor

இன்று தேங்காய்க்குக் கூட வரிசை கட்டி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது – சஜித்

editor

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பத் திகதி நீடிப்பு

editor