விளையாட்டு

பங்களாதேஷ் – இலங்கை கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) – பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் பங்களாதேஷ் கிரிக்கட் சபை இணைந்து குறித்த இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் கிரிக்கட் தொடரை இந்த மாதம் முதல் நவம்பர் மாதம் வரையில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, பங்களாதேஷ் அணி நேற்றைய தினம் இலங்கை வருவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

2018 அவுஸ்ரேலியாவில் பொதுநலவாய விளையாட்டு போட்டி

இலங்கைக்கு மற்றொரு பதக்கம்

சதம் விளாசி அநேக சாதனைகளுக்கு ஆளான ரிஷப் பந்த்