உலகம்

பங்களாதேஷில் பாடசாலையில் மோதிய விமானம்!

பங்களாதேஷ் டாக்காவின் உத்தரா பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது அந்நாட்டு விமானப்படை பயிற்சி விமானம் மோதி விபத்துக்குள்ளானது.

விமானம் விபத்துக்குள்ளான பின்னர் வெடிப்பு ஏற்பட்டதுடன் அதைத் தொடர்ந்து தீ பரவத் தொடங்கியது.

இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும், நான்கு பேர் காயமடைந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காயமடைந்தவர்கள் பொதுமக்களா அல்லது இராணுவ வீரர்களா என்பது இன்னும் தெரியவில்லை,

மேலும தீயை அணைக்கவும் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கவும் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான விமானம் F-7 BGI போர் விமானம் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

விமானம் விபத்துக்குள்ளானபோது மாணவர்களும் பாடசாலையி்ல் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி பதவியேற்பு

editor

ஆசியாவின் மிகவும் வயதான யானை உயிரிழந்தது

editor

கொரோனா இப்போதைக்கு முடிவுக்கு வராது