உள்நாடு

பங்களாதேஷில் இலங்கையருக்கு கொரோனா தொற்று உறுதி

(UTV | கொழும்பு) –பங்களாதேஷில் பணிபுரியும் இலங்கையருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இவர் பங்களாதேஷின் சிட்டகொங் நகரத்திலுள்ள குல்ஷி பகுதியில் வசிப்பதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

48 வயதான இலங்கையரின் மாதிரிகள் சிட்டகாங் நகரத்திலுள்ள கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழக ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டதன் மூலம் தொற்று  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த இலங்கையர் பங்களாதேஷில்  ஆடை தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.

பங்களாதேஷில்  கொரோனா வைரஸ் தொற்று  உறுதிசெய்யப்பட்ட முதல் வெளிநாட்டுவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷில் இதுவரை 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதுடன், 186 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரதமரின் ஊடகப் பேச்சாளராக பிரேம்னாத் நியமனம்

மீண்டும் பால்மா விலையை அதிகரிக்க கோரிக்கை

G.C.E (O.L.) மாணவர்களுக்கு இனி IT பாடம் கட்டாயம்!