அரசியல்உள்நாடு

பகிடிவதை தொடர்பில் விசாரணை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் பிரதமர் ஹரிணி

நாடு முழுவதுமுள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற உயர்கல்வி நிறுவகங்களுக்குள் நடைபெறும் பகிடிவதை மட்டுமல்லாமல் அனைத்து வகையான வன்முறைகளையும் விசாரணை செய்யுமாறு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பகிடிவதை மற்றும் வளாக வன்முறைகளை ஒழிப்பதற்கான தேசிய செயலணிக்குழு உறுப்பினர்களுடன் நேற்று முன்தினம் (ஜூலை 2) கல்வி அமைச்சில் நடைபெற்ற சந்திப்பின் போது கருத்து தெரிவித்த பிரதமர், நடைமுறை பரிந்துரைகளை உருவாக்கி இந்தப் பிரச்சினைகளைத் தடுக்க உடனடி நடவடிக்கையை ஆரம்பிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

மூன்று வருட காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள இந்த செயலணிக்குழு, கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்களால் ஏற்படுத்தப்படும் வன்முறை சம்பவங்களை ஆராய்ந்து, தகுந்த நடவடிக்கைகளை எடுக்க தேவையான அதிகாரம் மற்றும் அரசின் ஒத்துழைப்பும் வழங்கப்படும் என்பதை அவர் இதன் போது மீண்டும் உறுதிப்படுத்தினார்.

உயர்கல்வியில் வன்முறைக்கு பங்களிக்கும் பல காரணிகளை இந்தக்குழுவின் பிரதிநிதிகள் இதன் போது பிரதமரிடம் எடுத்துரைத்தனர், அவற்றில் மாணவர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையே சரியான உறவுகள் இல்லாமை குறித்த மாணவர்களின் நச்சு மனப்பான்மை, மரியாதை கோர அல்லது அதிகாரத்தை நிலைநிறுத்த வன்முறையை ஒரு வழிமுறையாக தவறாகப் பயன்படுத்தப்படுவது இதில் அடங்கியிருப்பதாகவும் இவர்கள் குறிப்பிட்டனர்.

கல்வி அழுத்தம் மற்றும் ஆசிரியர்களுக்குள் உள்ள அதிகார இயக்கவியல் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட மன அழுத்தத்தையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

குறுகியகால மற்றும் நீண்டகால உத்திகள் இரண்டின் அவசியத்தையும் பிரதமர் அமரசூரிய வலியுறுத்தினார். புதுப்பிக்கப்பட்ட சட்ட கட்டமைப்புகள் மற்றும் வன்முறையை சமாளிப்பதற்கான வழிமுறைகள், மனநிலையை மாற்றும் திட்டங்கள் ஆகியவற்றையும் பிரதமர் குறிப்பிட்டார்.

சட்ட நடவடிக்கை மட்டும் போதாது என்றும், தடுப்பு கல்வி நடவடிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இங்கு உரையாற்றிய கல்வி மற்றும் உயர்கல்வி துணை அமைச்சர் மதுரா செனவிரத்ன, எந்தவொரு வன்முறைக்கும் ஆளாகும் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார்.

Related posts

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் இருந்து நால்வர் நீக்கம்

கட்டுப்பாடுகளுடன் 20 வீத ஊழியர்களை தொழிலுக்கு அழைக்க தீர்மானம்

இஸ்ரேலில் கொல்லப்பட்ட இலங்கைப் பெண் குறித்து வெளியான தகவல்!