அரசியல்உள்நாடு

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. ஆட்சியமைக்கும் – செந்தில் தொண்டமான்

நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும் புரிந்துணர்வின் அடிப்படையில் உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைத்துள்ளன.

குறிப்பாக இ.தொ.கா அதிகமான உறுப்பினர்களை பெற்றுக்கொண்ட சபைகளில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தி அதிகமான உறுப்பினர்களை பெற்றுக்கொண்ட இடங்களில் தேசிய மக்கள் சக்தியும் ஆட்சியமைக்கும் என்ற அடிப்படையில் இந்தப் புரிந்துணர்வு எட்டப்பட்டது.

குறிப்பாக நுவரெலியா மாநகர சபை, வலப்பனை, அங்குராகெத்த, தலவாக்கலை,ஹட்டன் டிக்கோயா நகரசபை, கொத்மலை ஆகிய இடங்களில் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைப்பதாகவும், நுவரெலியா பிரதேச சபை, கொட்டகலை பிரதேச சபை, அக்கரப்பத்தன பிரதேச சபை, நோர்வுட் பிரதேச சபை ஆகிய இடங்களில் இ.தொ.கா ஆட்சி அமைப்பாகவும் புரிந்துணர்வு எட்டப்பட்டது.

இந்த நிலையில், நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. அதிக ஆசனங்களை பெற்றிருந்தும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் ஏனைய தரப்புடன் இணைந்து ஆட்சியமைத்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

நோர்வூட் பிரதேச சபையில் போட்டியிட்ட ஏனைய கட்சிகளை விட அதிகமான வாக்குகளை பெற்று இ.தொ.கா முதலிடத்தை பெற்றதனால், மக்கள் ஆணையை தேசிய மக்கள் சக்தி மதிப்பதாகவும், மக்கள் ஆணையை நிலைநாட்டுவதற்கான தேவையான நடவடிக்கையை மேற்கொள்வதாகவும் இக்கலந்துரையாடலின் போது இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானிடம் தெரிவித்தனர்.

மேலும், விரைவில் நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. ஆட்சியமைக்கும்.‘‘ என்று இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

Related posts

சீரற்ற வானிலை காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் நாளை திறப்பு

editor

நாட்டிலிருந்து வெளியேறினார் பசில் – வீடியோ

editor

தங்காலையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி