வகைப்படுத்தப்படாத

நோர்வூட் பகுதியில் விபத்து இருவர் படுகாயம்

(UDHAYAM, COLOMBO) – ஹட்டன் பொகவந்தலா பிரதான வீதியில் நோர்வூட் தியசிரிகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்து நாவலபிட்டி மாவட்ட  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

ஹட்டன் பகுதியிலிருந்து நோர்வூட் நோக்கிச்சென்ற கெப்ரக வாகனமே 10.06.2017 மாலை 3.30 மணியளவீல்  சுமார் 30 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது

விபத்தில் காயமுற்ற சாரதி மற்றும் வாகனத்தில் பயணித்த மற்றெறுவருமாகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நாவலபிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்

அதிக வேகமே விபத்துக்கான காரணம் எனவும்  விபத்தினால்  குடியிருப்பொன்று சேதமாகியுள்ளதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்  விபத்து தொடர்பிலான மேலதிக. விசாரணை நோர்வூட் பொலிஸார்  தொடர்கின்றனர்

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

Related posts

ரூ.35 கோடி நகைகள் கொள்ளை

முறிப்பு பகுதியில் விபத்து ஒருவர் பலி

President, Premier seeks stronger ties with UK