வகைப்படுத்தப்படாத

நோட்ரோ-டேம் தேவாலயத்தை சீரமைக்க 3 டாலர்கள் கொடுத்த சிறுமி !

(UTV|FRANCE) தீ விபத்தில் சேதமான பாரீஸ் நோட்ரோ-டேம் தேவாலயத்தை சீரமைக்க இங்கிலாந்தை சேர்ந்த கெயித்லின் என்ற 9 வயது சிறுமி தன்னுடைய சிறுசேமிப்பில் இருந்து 3 அமெரிக்க டாலரை நன்கொடையாக வழங்கியுள்ள சம்பவம் அனைவரையும் நெகிழவைத்துள்ளது.

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் 850 ஆண்டுகள் பழமையான நோட்ரே-டேம் தேவாலயம், கடந்த 15 ம் திகதி தீ விபத்தில் தேவாலயத்தின் பெரும்பகுதி நாசமடைந்தது.

பிரான்ஸ் நாட்டின் பிரசித்தி பெற்ற இந்த தேவாலயம், முன்பு இருந்ததைக் காட்டிலும் அதிக பொலிவுடன் மீண்டும் கட்டியெழுப்பப்படும் என ஜனாதிபதி மெக்ரான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதற்காக சர்வதேச அளவில் நிதி திரட்டப்பட்டு வருகிறது.

Related posts

Thirteen acquitted in Trincomalee murder trial

அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம்

சிவனேசத்துரை சந்திரகாந்தனின் விளக்கமறியல் காலம் நீடிப்பு