வகைப்படுத்தப்படாத

நோட்டனில் ஆணின் சடலம் மீட்பு

(UDHAYAM, COLOMBO) – நோட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லக்ஷபான வக்கம பகுதியில் ஆணின் சடலமொன்றை நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் மீட்டுள்ளனர்

வக்கம கிராம சேகவர் பிரிவிற்குட்பட்ட பதியிலுள்ள பாலத்திற்கருகிலே 15.06.2017 மாலை 3.30 மணியளவில் சடலத்தை மீட்டுள்ளனர்

பிரதேச மக்களினால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய நீரோடைப்பகுதியில் காணப்பட்ட மேற்படி நபரின் சடலத்தை மீட்கும் பணியில்  பிரதேசவாசிகளும்பொ  லிஸாரும்  ஈடுபட்டுள்ளதுடன் சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லையென்றும் நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர் சடலத்தை மீட்டப்பின் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

Related posts

வவுனியா வர்த்தக சங்கத்தினர் எதிர்ப்பு நடவடிக்கையில்

ஆலோக் சர்மாவின் இலங்கை விஜயம் ரத்து

அரசாங்க தரப்பின் முக்கிய கூட்டம் ஒன்று இன்று