நைஜீரியாவின் வடமத்திய நைஜர் மாநிலத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் சுமார் 60 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்தின்போது சுமார் 100க்கும் மேற்பட்டோர் குறித்த படகில் பயணித்துள்ளனர்
செவ்வாய்க்கிழமை காலை மலாலே மாவட்டத்தில் உள்ள துங்கன் சுலேவிலிருந்து துக்கா நகருக்கு இரங்கல் தெரிவிக்கும் நோக்கில் புறப்பட்ட படகு, போர்கு உள்ளூர் அரசாங்கப் பகுதியில் உள்ள கௌசாவா சமூகத்திற்கு அருகே நீரில் மூழ்கிய மரத்தின் அடிப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் குறித்த விபத்தில், பத்து பேர் ஆபத்தான நிலையில் உள்ளதுடன், பலர் இன்னும் தேடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் சிறுவர்களும் அடங்குவர் என அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.