உள்நாடுசூடான செய்திகள் 1

நேற்றைய தினம் 17 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

(UTV|கொழும்பு )- இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3012 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் நேற்றைய தினம் 17 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து வருகை தந்த 12 பேரும், மாலைதீவிலிருந்து வருகை தந்த 03 பேரும், இந்தியப் பிரஜைகள் இருவரும் இவ்வாறு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, நாட்டில் தற்போது 140 கொரோனா நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், இதுவரை 2,860 பேர் வைரஸிலிருந்து குணமடைந்துள்ளதுடமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சேனாவைப் போன்று மற்றுமொரு புதிய வகை புழு இனம்

கோட்டாபயவுக்கு எதிரான வழக்கை விசாரணைக்கு எடுக்க உயர்நீதிமன்றம் அனுமதி

சிவப்பு அரிசிக்கு மட்டுமே தட்டுப்பாடு – அமைச்சர் வசந்த சமரசிங்க

editor