உள்நாடு

நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் விபரம்

(UTV | கொவிட்-19) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 21 பேர் நேற்று (07) பதிவாகியுள்ளனரென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1835 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று பதிவானோரில் 16 பேர் குவைட்டிலிருந்து நாடு திரும்பிய நிலையில், திருகோணமலை மற்றும் மின்னேரியா தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தவர்களென தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இருவர் கட்டாரிலிருந்து நாடு திரும்பியவர்கள் என்பதுடன், ஒருவர் பங்களாதேஷில் இருந்து நாடு திரும்பியவர் எனவும் மற்றைய இருவர் பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

மத்திய வங்கியின் நிதிச் சபைக்கு இரு உறுப்பினர்கள் நியமனம்

தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு – கொழும்பு பெரிய பள்ளிவாயலின் அறிவிப்பு

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அலுவலகத்தின் மீது தாக்குதல்

editor