உள்நாடு

நேற்று 557 கொரோனா நோயாளர்கள் அடையாளம்

(UTV | கொழும்பு) – நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளனோர் மொத்த எண்ணிக்கை 43, 856 ஆக உயர்வடைந்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 557 பேர் நேற்றைய தினம் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டவர்களில் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடைய 555 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜென்ரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஐக்கிய அரபு ராச்சியத்தில் மற்றும் இத்தாலியில் இருந்து இலங்கை வந்த தலா ஒருவருக்கும் நேற்று கொவிட்19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் இதுவரையில் 36,155 நோயாளர்கள் சிகிச்சைகளின் பின்னர் குணமடைந்துள்ளதுடன், 7,493 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

 பற்றாக்குறையாக மருந்துகளின் பட்டியல் வெளியானது

பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகத்தில் விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்

அத்துருகிரியவில் துப்பாக்கிச் சூடு – பிரபல வர்த்தகர் பலி.