(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 19,771 ஆக உயர்வடைந்துள்ளது.
இதன்படி, நாட்டில் நேற்றைய தினம் 491 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளது.
அந்தவகையில் 487 கொரோனா தொற்றாளர்கள் பேலியகொட கொத்தணியுடன் தொடர்புகளை பேணியவர்கள் , வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வருகை தந்த நான்கு பேருக்கும் நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பேலியகொடை மற்றும் மினுவாங்கொடை கொத்தணியில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 16,252 ஆக அதிகரித்துள்ளது.
இதேவளை, நேற்றைய தினம் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் கொழும்பிலேயே பதிவாகியுள்ளனர்.
இதன்படி, கொழும்பில் 292 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,590 ஆக அதிகரித்துள்ளதுடன், 6,098 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

