உள்நாடு

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்

(UTV|கொழும்பு)- நாட்டில் நேற்றைய தினம்(23) அடையாளம் காணப்பட்ட 21 கொரோனா நோயாளர்களுள் கடற்படையினர் 19 பேர் உள்ளடங்குவதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய கடற்படையினர் 19 பேர் உள்ளிட்ட டுபாயிலிருந்து நாட்டிற்கு வருகைதந்துள்ள இருவர் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நாட்டில் தொற்றுக்கள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1089 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் முழுமையாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 660 ஆக காணப்படுகின்றது.

Related posts

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் தீவிர விசாரணை – ஜனாதிபதி அநுர உறுதி

editor

உத்திக பிரேமரத்னவின் ஜப்பான் விஜயம் குறித்து அறிக்கை

பாராளுமன்ற புதிய செயற்குழு நியமனம்