உள்நாடு

நேற்று இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் 9 பேர் கடற்படையினர்

(UTV|கொழும்பு )- நேற்றைய தினம்(30) கொரோனா தொற்றுக்குள்ளான 16 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

அவர்களுள் 9 பேர் கடற்படை உறுப்பினர்கள் என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 665 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளான 154 பேர் குணமடைந்துள்ளதுடன், 504 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

காலிமுகத்திடல் தாக்குதல் குறித்து அமெரிக்க தூதரின் அறிவிப்பு

கிளிநொச்சியில் மீண்டும் மணல் விநியோகத்திற்கு அனுமதி – அமைச்சர் டக்ளஸ்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 4 ஆயிரத்துக்கும் அதிகமான முறைப்பாடு

editor