கேளிக்கை

நேர்கொண்ட பார்வை படக்குழு வெளியிட்ட அடுத்த அறிவிப்பு

(UTVNEWS | COLOMBO) -வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் அடுத்த பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘நேர்கொண்ட பார்வை’. வினோத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் அஜித் வழக்கறிஞராக நடித்துள்ளார். பொலிவுட்டில் மாபெரும் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் ரீமேக்காக இப்படத்தை தயாரித்துள்ளார் போனி கபூர். இப்படம் ஆகஸ்ட் 8ஆம் திகதி வெளியிடுவதாக படக்குழுவினர் அறிவித்தனர்.

இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யாபாலன் நடிக்கிறார். மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Related posts

பிரபல நடிகர்கள் பலருக்கு பாதுகாவலராக இருந்த மாரநல்லூர் திடீர் மரணம்

Avengers Infinity War பார்த்தவர் மாரடைப்பால் மரணம்

இசைத்துறையின் முதலாவது பேராசிரியை காலமானார்