வகைப்படுத்தப்படாத

நேபாள ஜனாதிபதி நாளை இலங்கை விஜயம்

(UDHAYAM, COLOMBO) – சர்வதேச வெசாக் தின வைபவத்தில் கலந்துகொள்வதற்காக நேபாள ஜனாதிபதி பிந்தியா தேவி பண்டாரி நாளை இலங்கை வருகின்றார்.

ஐநா வெசாக் தின வைபத்தின் நிறைவு நிகழ்ச்சி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் மஹாமடுவ மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

நேபாள் ஜனாதிபதி பிந்தியா தேவி பண்டாரி பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளார்.

இன்று சர்வதேச வெசாக் தின வைபவம் ஆரம்பமாகின்றது. இந்த நிகழ்வில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளவுள்ளார்.

Related posts

Presidential Comm. report on SriLankan, Mihin tomorrow

வடக்கு மாகாண வைத்தியசாலைகளின் தாதியர்கள் நாளை பணிப் புறக்கணிப்பு

காணாமல் போனோரின் உறவினர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம்..