உலகம்

நேபாளத்தின் திரிபுவன் சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறப்பு

24 மணி நேர மூடலுக்குப் பிறகு, காத்மண்டுவின் திரிபுவன் சர்வதேச விமான நிலையம் பொதுமக்கள் போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

நேபாள சிவில் விமானப் போக்குவரத்து ஆணைக்குழு இன்று (10) வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் காரணமாக பாதுகாப்பு காரணங்களை கருத்திற் கொண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையம் நேற்று (09) மூடப்பட்டது.

திரிபுவன் சர்வதேச விமான நிலைய பாதுகாப்புக் குழுவின் கூட்டத்தின் போது விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

பயணிகள் தங்கள் விமான நிறுவனங்களைத் தொடர்பு விபரங்களை பெற்றுக் கொள்ளுமாறும், விமான நிலையத்திற்கு பயணிக்கும் போது அவர்களின் அதிகாரப்பூர்வ டிக்கெட்டுகள் மற்றும் அடையாள அட்டையை எடுத்துச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் மற்றும் எக்ஸ் உள்ளிட்ட 26 சமூக ஊடக வலைத்தளங்களுக்கு அரசாங்கம் தடை விதித்ததைத் தொடர்ந்து, ஜெனரல் இசட் தலைமையிலான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

அதனை கட்டுப்படுத்த பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலர் உயிரிழந்தமையை அடுத்து போராட்டம் வன்முறையாக மாறியது.

உயர் நீதிமன்றம், பாராளுமன்றம், அமைச்சர்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது.

இந்நிலையில் நேபாளத்தில் அமைதியை ஏற்படுத்த இராணுவம் அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஈரான் செல்லும் அலி சப்ரி!

Molnupiravir : பிரிட்டன் அரசு பச்சைக் கொடி

ஏரியில் படகு கவிழ்ந்து 33 பேர் பலி