அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

நேபாளத்தின் இடைக்கால அரசாங்கத்தின் புதிய பிரதமருக்கு ஜனாதிபதி அநுர வாழ்த்து!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நேபாளத்தின் இடைக்கால அரசாங்கத்தின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள சுசீலா கார்க்கிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

” சுசீலா கார்க்கி அவர்கள் நேபாளத்தின் பிரதமராகப் பொறுப்பேற்றதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது தலைமை, நேபாளத்தை அமைதி மற்றும் ஜனநாயகத்திற்கு இட்டுச்செல்லும் என நாங்கள் முழுமையாக நம்புகிறோம்,” என்று ஜனாதிபதி பதிவிட்டுள்ளார்.

கடந்த செப்டம்பர் 8-ஆம் திகதி நேபாளத்தில் இடம்பெற்ற மக்கள் போராட்டங்களைத் தொடர்ந்து, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி தலைமையிலான அரசு கவிழ்ந்தது. மக்கள் போராட்டங்களில் குறைந்தது 51 பேர் உயிரிழந்தனர்.

நேபளத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான சுசீலா கார்க்கி, இடைக்கால பிரதமராக வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 12 ) இரவு ஜனாதிபதி அலுவலகத்தில் இடைக்கால பிரதமராக பதவியேற்றார்.

இந்த நியமனத்தின் மூலம், நேபாளத்தின் வரலாற்றில் பிரதமர் பதவியை வகிக்கும் முதல் பெண்மணி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

நேபாளத்தில் போராட்டங்களை வழிநடத்திய “ஜென் Z” இளைஞர்களின் பிரதிநிதிகளின் வலுவான ஆதரவைப் பெற்ற பின்னர், இடைக்காலப் பிரதமராக சுசீலா கார்க்கி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தேர்தலை கூட நடத்த முடியாத நிலை!

ஆபத்தான நிலையில் உள்ள பாரிய கட்டடம்!

வங்காள விரிகுடாவில் குறித்த காற்றழுத்த தாழ்வு நிலை