வணிகம்

நெல் மற்றும் அரிசியை பதுக்கி வைப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

(UTV – கொழும்பு) – சந்தையில் அரசிக்கான தட்டுப்பாடு ஏற்படுவதை தடுப்பதற்காக தங்களிடமுள்ள நெல் மற்றும் அரிசியை தட்டுப்பாடின்றி விநியோகிக்குமாறு நுகர்வோர் அதிகார சபை வர்த்தகர்கள் மற்றும் அரிசி மொத்த சேகரிப்பாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

நுகர்வோர் அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரிசியை பதுக்கி வைக்கும் நிறுவனங்கள் மற்றும் ஆட்கள் தொடர்பில் சுற்றி வளைப்புக்களை முன்னெடுக்கவுள்ளதாக அந்த அதிகாரி சபை தெரிவித்துள்ளது.

நெல் மற்றும் அரிசியை பதுக்கி வைப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிடியாணை இன்றி அவ்வாறானவர்களை கைது செய்ய முடியும் என்றும் நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

அவ்வாறனவர்கள் தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையின் 1977 என்ற அவசர இலகத்திற்கு தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்யுமாறு அந்த அதிகார சபை பொது மக்களை கோரியுள்ளது.

Related posts

பேக்கரி உற்பத்திகளின் விலைகள் அதிகரிப்பு

இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு

GES 2017 பிரதிநிதிகளுடன் அறிவு பகிர்வு அமர்வொன்றை ICTA மற்றும் அமெரிக்க தூதரகம் இணைந்து ஏற்பாடு