உள்நாடுபிராந்தியம்

நுவரெலியாவில் பல இடங்களில் உறைபனி பொழிந்துள்ளது

காலை வேளையில் நிலவும் குளிரான வானிலை காரணமாக இன்றைய தினமும் (24) நுவரெலியாவின் பல இடங்களில் துகள் உறைபனி பொழிந்துள்ளது.

நாட்டின் குறைந்தபட்ச வெப்பநிலை இன்றும் நுவரெலியாவிலேயே பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, நுவரெலியா வானிலை மையத்தில் 7.8 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இதேவேளை, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் அமைந்துள்ள நீரேந்து பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் வாகனப் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக ஹட்டன் – நுவரெலியா, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதிகள் மற்றும் கிளை வீதிகளில் இந்த பனிமூட்ட நிலைமை அதிகமாகக் காணப்படுகிறது.

இதன் காரணமாக, அவ்வீதிகளில் வாகனங்களைச் செலுத்தும் போது முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டவாறு மெதுவாகவும் அவதானத்துடனும் வாகனங்களைச் செலுத்துமாறு ஹட்டன் பொலிஸார் சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related posts

சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளராக கடமையாற்றிய எம்.ஏ.கிதிர் முஹம்மட் 34 வருட அரசசேவையிலிருந்து பிரியாவிடை

editor

கோதுமை மா விநியோகத்தில் ஈடுபடும் பிரதான இரு நிறுவனங்களுக்கு நிதி நிவாரணம் யார் வழங்கியது? அநுரகுமார திஸாநாயக்க

தனு ரொக் குழுவின் தலைவர் உள்ளிட்ட 9 பேர் கைது