நுவரெலியாவில் இயங்கும் அரச வங்கி ஊழியர்கள் இணைந்து பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக அரச வங்கிகளின் தற்போதைய நிலைமை தொடர்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய தினம் (12) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் முதன்மை கோரிக்கையாக அரச வங்கிகளில் 1996 ஆம் ஆண்டுக்கு பின்னர் இணைத்துக்கொள்ளப்பட்ட ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குமாறு கோரி, ஏனைய அரச ஊழியர்கள் போல் எங்களுக்கு அனைத்து சலுகைகளும் பெற்று தாரக்கோரியும் மதிய நேர உணவு இடைவேளையில் 12.30 மணிமுதல் 1.30 வரை கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
இதன்போது அரச வங்கி எதிர் நோக்கும் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியும், கோசங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்கள் கோரிக்கைகள் எதிர்வரும் நாட்களில் முறையாக தீர்க்கப்படாவிட்டால் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எச்சரித்தனர்.
-செ.திவாகரன்