உள்நாடுவீடியோ

நுரைச்சோலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக இருந்த ரவி பத்மகுமாரவுக்கு இடமாற்றம்

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட 25 பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், பொலிஸ் மா அதிபர் இன்று (21) முதல் இந்த இடமாற்றங்களை வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனிடையே, போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட, நுரைச்சோலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக இருந்த ரவி பத்மகுமார, 19 ஆம் திகதி முதல் கம்பஹா பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் அவருக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

வீடியோ

Related posts

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாணய நிதியத்துடான் நாளை பேச்சுவார்த்தை!

வெள்ளிக்கிழமை முதல் கிடைக்கவுள்ள விசேட கொடுப்பனவு!

அத்தியாவசிய சேவைகளாகக் குறிப்பிடும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு