உள்நாடு

நுகேகொடைக்குச் செல்லும் வீதிகளின் தொங்கவிடப்பட்ட புல் கட்டுக்கள்?

எதிர்க்கட்சியினால் ஒழுங்கமைக்கப்படும் மக்களின் குரல் (மஹா ஜன ஹඬ) என்ற பாரிய மக்கள் பேரணி இன்று (21) பிற்பகல் நுகேகொடை ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் நடைபெற உள்ளது.

இதற்கிணங்க, அண்மையிலுள்ள பல பாடசாலைகள் பரீட்சை மையங்களாக இயங்குவதால், ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தும் போது அது குறித்து கவனம் செலுத்துமாறு பொலிஸார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், இன்றைய தினத்தை முன்னிட்டு பொலிஸார் விசேட போக்குவரத்துத் திட்டமொன்றையும் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, நேற்றிரவு நுகேகொடைக்குச் செல்லும் வீதிகளின் இருமருங்கிலும் புல்லுக் கட்டுக்கள் தொங்கவிடப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்தக் கைங்கரியத்துக்கான உண்மையான காரணம் இன்னும் வெளியாகவில்லை.

Related posts

சுற்றாடல் அழிப்புக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டம்

ஜீவன் தொண்டமான் உலக பொருளாதார மன்றத்தால், இளம் உலகத் தலைவராக தெரிவு

ஜனாதிபதி அநுரவுக்கும் ஜப்பான் நிதி அமைச்சருக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை

editor