அம்பதலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக, எதிர்வரும் 25ஆம் திகதி (ஞாயிறு) காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை 12 மணி நேரம் கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடை செய்யப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இதன் காரணமாக, கொழும்பு நகரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க, தேவையான நீரை முன்கூட்டியே சேமித்து வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.
நீர் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் பின்வருமாறு:
கொழும்பு 1 முதல் 15 வரை
கோட்டை
கடுவலை
பத்தரமுல்லை
கொலன்னாவை
கோட்டிகாவத்தை
முல்லேரியாவை
IDH
மஹரகம
தெஹிவளை
கல்கிஸ்ஸை
இரத்மலானை
மொரட்டுவை