சூடான செய்திகள் 1

நீர்நிலைகளின் வான் கதவுகள் திறப்பு

(UTV|ANURADHAPURA)-கடந்த தினங்களில் நிலவிய கடும் மழையுடனான காலநிலை காரணமாக அனுராதபுரம் மாவட்டத்தின் நாச்சாதுவ, நுவரவௌ, கலாவௌ, ராஜாங்கனை, அங்கமுவ மற்றும் மஹகனதராவ ஆகிய நீர்நிலைகளின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், அதில் இருந்து வெளியாக்கப்படும் நீர், மல்வத்துஓய, கலாஓய மற்றும் கனதராஓய ஆகியவற்றின் ஊடாக பயணிக்கின்ற நிலையில், அவற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நதிகளை அண்டிய பகுதிகளில் வசிக்கின்ற மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

 

 

 

Related posts

அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு இன்று

ஹோட்டன் சமவெளியில் வண்டுகளை பிடித்த இருவர் கைது

ரயில்வே ஊழியர்களை பணிக்கு திரும்புமாறு அறிவிப்பு