உள்நாடு

நீர்கொழும்பு பகுதியில் துப்பாக்கிச் சூடு – இருவர் கைது

நீர்கொழும்பு, தலாதுவ பிரதேசத்தில் இன்று (28) பிற்பகல் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடந்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2 நபர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் மற்ற நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கிச் சூட்டில் எந்த உயிர் பலியும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நீர்கொழும்பு பொலிஸார் சம்பந்தப்பட்ட 2 நபர்களையும் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் அந்த துப்பாக்கிக்கு சட்டப்பூர்வ உரிமம் உள்ளதாகவும், சம்பந்தப்பட்ட நபர் ஒரு பிரபலமான தொழிலதிபர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பொய்யால் தொடர்ந்தும் ஆட்சி நடத்தி வர முடியாது அரசாங்கத்தின் உண்மை நிலை தற்போது வெளிப்பட்டுள்ளது – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor

டயானா மனுவை ஐவரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்பாக விசாரணை – மனு தாக்கல்

கிரிக்கெட் நிறுவனத்தின் அறிவிப்பு