சூடான செய்திகள் 1

நீரில் மூழ்கி பாடசாலை மாணவன் ஒருவன் பலி…

நிவித்திகல, தொலஸ்வல பகுதியில் நீரில் மூழ்கி பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

பாடசாலை மாணவர்கள் குழு ஒன்று கால்வாய் ஒன்றை கடக்க முற்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தொலஸ்வல பகுதியை சேர்நத 11 வயதுடைய மாணவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் நிவிதிகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

உலக சுகாதார அமைப்பு இலங்கைக்குப் பாராட்டு

1.5 பில்லியன் இலாபத்தினை திறைசேரிக்கு வழங்கும் லிட்ரோ!

11 உறுப்பினர்கள் பயங்கரவாத விசாரணை பிரிவிடம் ஒப்படைப்பு