நீதிமன்றங்களின் நீதிவான்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதும் பொலிஸ் மா அதிபரின் முறைப்பாடுகளின் அடிப்படையில் அவர்களை இடமாற்றம் செய்வதும் மிகப்பெரிய தவறான முன்னுதாரணமாக அமைக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ கூறுகிறார்.
பாராளுமன்றத்தில் இன்று (17) நடைபெற்ற நீதி அமைச்சின் செலவினங்கள் குறித்த குழு விவாதத்தின் போது அவர் இவ்வாறு கூறினார்.
ஒரு நீதிவான் தவறான தீர்ப்பை வழங்கியதாக பொலிஸ. தரப்பினர் உணர்ந்தால், நீதிவானை மாற்றுவது அல்ல, மாறாக உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதுதான் தீர்வு என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஒழுக்காற்று காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்ட இத்தகைய திடீர் இடமாற்றங்கள் காரணமாக, நீதிவான களின் பிள்ளைகளை பாடசாலையில் சேர்ப்பது கூட ஒரு பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது என்று நாமல் ராஜபக்க்ஷ மேலும் கூறினார்.
அரசாங்கம் என்ன சொன்னாலும், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நீதி அமைச்சு மிகவும் அரசியல்மயமாக்கப்பட்டுள்ளது.
இந்த அரசாங்கத்தின் நேர்மையைப் பாதுகாக்க இந்த நிலைமை உடனடியாக மாற வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.
