வகைப்படுத்தப்படாத

எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி நீதிமன்றினுள் மரணம்

(UTV|EGYPT) எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் மோர்சி, நீதிமன்றில் விழுந்து மரணித்தார். அவரது வழக்கு விசாரணை நேற்று இடம்பெற்ற வேளையில், நீதிமன்ற விசாரணைக் கூட்டில் இருந்து சாட்சி வழங்கிய போது இந்த மரணம் இடம்பெற்றுள்ளது.
2013ம் ஆண்டு அவர் இராணுவத்தினால் பதவி நீக்கப்பட்டார்.
மாரடைப்பின் காரணமாகவே அவர் மரணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
67 வயதான அவர், பதவி நீக்கப்பட்டதில் இருந்து சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

Related posts

Malinga seals Sri Lanka win in his Final ODI

Libya attack: ‘Dozens killed in air strike’ on migrant centre

அனைவருக்கும் வாக்குரிமை பொதுவானதே – மஹிந்த தேசப்பிரிய