முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இன்று (28) பிற்பகல் கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் லண்டன் பயணம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வரும் வழக்கில் முன்னிலையாவதற்காகவே அவர் இவ்வாறு நீதிமன்றம் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில் முன்னிலையாவதற்காக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்தார்.
