சூடான செய்திகள் 1

நீதிமன்றில் முன்னிலையாகும் மகிந்த தரப்பு…

(UTV|COLOMBO)-பாராளுமன்றில் அவநம்பிக்கைப் பிரேரணை நிறைவேற்றப்பட்ட நிலையில், பிரதமர் மற்றும் அமைச்சரவை பதவிகளது அதிகாரத்தை கேள்விக்கு உட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றில் 122 பாராளுமன்ற உறுப்பினர்களால் தாக்கல் செய்யப்பட்ட கேள்விவிராந்து மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

இந்த மனுவின் அடிப்படையில் பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்றைய விசாரணையின் போது மகிந்த ராஜபக்ஷ பாராளுமன்ற  உறுப்பினர் மற்றும் அமைச்சரவையில் அங்கம் வகித்தவர்களும் முன்னிலையாக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று மேல் நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேன மற்றும் அர்ஜுன் ஒபேசேகர ஆகியோரால் விசாரிக்கப்படவுள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

Related posts

பெருந்தோட்டத் தொழிலாளர்களை கடமைக்கு திரும்புமாறு ஜனாதிபதி வேண்டுகோள்

கணவனின் அசிட் வீச்சுக்கு இலக்காகிய மனைவி மற்றும் மகள்

பொலிஸாரின் உத்தரவை மீறி தப்பியோடிய இருவர் கைது