அரசியல்உள்நாடு

நீதிமன்றில் ஆஜரான முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச – பிடியாணை வாபஸ்!

கைது செய்யப்படுவதற்காகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, தனது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலையானதைத் தொடர்ந்து, அந்தப் பிடியாணையை மீளப் பெறுவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

75 மில்லியன் ரூபாவிற்கும் அதிக சொத்துக்களைச் சட்டவிரோதமான முறையில் ஈட்டியதாகக் கூறி, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (14) முற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது பிரதிவாதியான விமல் வீரவன்ச நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இதன் காரணமாக, பிரதிவாதியைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் பிடியாணை உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.

எனினும், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே விமல் வீரவன்ச தனது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இதனையடுத்தே, அவருக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப் பெறுவதற்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Related posts

பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளில் மாற்றம் – ஹர்ஷன ருக்ஷான்.

வீடியோ | குப்பை ஏற்றிச்செல்லும் ரெக்டரில் சென்று தவிசாளர்கள் போராட்டம்!

editor

இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் முறையாக நான்கு பெண் DIG ஒரே நேரத்தில் நியமனம்

editor