கிசு கிசு

நீண்ட இடைவேளைக்கு பிறகு கீர்த்தி சுரேஷ்

(UTV|INDIA) ‘இது என்ன மாயம்‘ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், தன் அடுத்தடுத்த படங்களில் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார்.

தன் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் மட்டுமே கவனம் செலுத்துவதாகக் கூறியிருந்தார். அதனாலேயே, ‘சர்கார்’ படத்துக்குப் பிறகு எந்தப் படத்திலும் ஒப்பந்தம் ஆகாமல் இருந்தார். நரேந்திரநாத் இயக்கத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
கீர்த்தியின் கைவசம் தற்போது எந்த தமிழ்ப் படமும் இல்லை. இந்த நிலையில், கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில், புதுமுக இயக்குநர் ஒருவரின் இயக்கத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

அமேசான் உரிமையாளர் மனைவியை பிரிந்தார்

முரளியின் தூஸ்ராவில் நாம் மயங்கினோம் : முரளி அரசின் 2 ஏக்கர் நிலத்தில் மயங்கினார்

பிரதமருக்கு ஆதரவாகும் வாசு, வீரவன்ச மற்றும் கம்மன்பில