உலகம்

நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் விபத்து – ஐந்து பேர் பலி – பாகிஸ்தானில் சோகம்

வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்தூன்க்வா மாகாணத்தில், இன்று (15) மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற MI-17 ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில், இரு விமானிகள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர்.

வடக்கு பாகிஸ்தானில் கடுமையான வானிலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற ஹெலிகொப்டர் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

மோசமான வானிலை காரணமாக விமானம் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

ஒரே நாளில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் – ஆப்கானிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

editor

சர்வதேச கொரோனா : 9.43 கோடியை கடந்தது

கொரோனா வைரஸூக்கு எதிராக ஆன்டிபாடிகள் தயார்