உள்நாடுபிராந்தியம்

நிலாவெளியில் முச்சக்கர வண்டியும் பட்டா ரக வாகனமும் மோதி விபத்து – ஒருவர் படுகாயம்

திருமலையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இச் சம்பவம் இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

திருகோணமலை நிலாவெளி பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றும் பட்டா ரக வாகனமும் மோதி இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் நிலாவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிலாவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் விரைவில் இரத்துச் செய்யப்படும் – முசலியில் பிரதமர் ஹரிணி

editor

10,000 காணி உறுதிப் பத்திரங்கள் மக்களுக்கு விரைவில்!

‘நாட்டின் இளைஞர்கள் தற்போதைய அரசியலை வெறுக்கிறார்கள்’